தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஒன்றிணைந்து ஒரே ஆந்தாலஜி படத்தில் பல்வேறு களங்களில் கதை சொல்லி ரசிகர்களுக்கு விருந்தளித்து மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சிம்புதேவன், பா.ரஞ்சித் மற்றும் M.ராஜேஷ் ஆகிய நான்கு இயக்குனர்களின் இயக்கத்தில் 4 வித்தியாசமான கதைகளோடு வெளிவருகிறது விக்டிம் ஆந்தாலஜி படம்.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கன்ஃபெஸன், இயக்குனர் சிம்புதேவன் கொட்டைப்பாக்கு வத்தலும் மொட்டைமாடி சித்தரும், இயக்குனர் பா.ரஞ்சித் தம்மம், இயக்குனர் ராஜேஷ்.M மிர்ரேஜ் ஆகிய ஆகிய 4 எபிசோடுகளை கொண்ட ஆந்தாலஜி படமாக தயாராகியுள்ள விக்டிம் படத்தை AXESS FILM FACTORY மற்றும் BLACK TICKET COMPANY இணைந்து தயாரித்துள்ளன.

அமலா பால், பிரியா பவானி ஷங்கர், தம்பிராமையா, நாசர், நட்ராஜ்(நட்டி), குரு சோமசுந்தரம், பிரசன்னா, கலையரசன் உள்ளிட்ட பலர் விக்டிம் படத்தில் நடித்துள்ளனர். சாம்.CS, பிரேம்ஜி, கனேஷ் சேகர், தென்மா ஆகியோர் இசையமைத்துள்ள விக்டிம் படத்திற்கு R.சரவணன், சக்தி சரவணன், தமிழ்.A. அழகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

நாளை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பிரபல OTT தளமான சோனி லைவ் தளத்தில் விக்டிம் ஆந்தாலஜி படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் விக்டிம் படத்தின் விறுவிறுப்பான புதிய ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்ததுள்ள விக்டிம் படத்தின் ட்ரைலர் இதோ…
 

Four lives, four stories and four new experiences! #Victim - Who is next? from the minds of 4 best directors is now streaming on #SonyLIV.#VictimOnSonyLIV @beemji @chimbu_deven @vp_offl @rajeshmdirector@AxessFilm @blacktktcompany
#Nasser #ThambiRamaiah #Natraj pic.twitter.com/tjdm0bUHNN

— SonyLIV (@SonyLIV) August 4, 2022