தமிழ் திரையுலகின் ஆகச் சிறந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவின் இன்றைய காலகட்டத்தில் ஒரு இயக்குனரின் திரைப்படங்களுக்காகவும் அவரது அடுத்தடுத் திரைப்படங்களின் அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என்றால் அது இயக்குனர் வெற்றிமாறனுக்கு மட்டுமே.

அந்தவகையில் அடுத்ததாக தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கூட்டணியாக தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி விரைவில் இணையவுள்ளது. மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இயக்குனர் வெற்றிமாறன் பணியாற்ற வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக RS இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி உருவாகும் விடுதலை திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விடுதலை திரைப்படத்திற்காக முதல் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, விடுதலை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இன்று வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வெற்றிமாறன் விஜய் சேதுபதியின் விடுதலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.