தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களாக திகழும் இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் தற்போது நட்புக்காக நடிகர்களாக இணைந்துள்ளனர். தற்சமயம் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

அதேபோல் முதன்முறை தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கும் கஸ்டடி திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சீயான் விக்ரமுடன் முதன்முறை இணைந்திருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் KGFஐ மையப்படுத்திய பிரம்மாண்டமான பீரியட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த மூன்று இயக்குனர்களும் தற்போது ரத்தம் திரைப்படத்திற்காக இணைந்து கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர். தமிழ் படம் & தமிழ் படம்-2 ஆகிய படங்களின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிறது ரத்தம் திரைப்படம். நடிகைகள் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பொலிட்டிகல் க்ரைம் திரில்லர் படமாக உருவாகி வரும் ரத்தம் படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் என்.கண்ணன் இசையமைக்கிறார். ரத்தம் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரத்தம் திரைப்படத்திற்காக வெற்றிமாறன், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோர் சிறப்பு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

மேலும் இவர்கள் மூவரும் தோன்றும் ரத்தம் படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகும் எனவும் அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் மூன்று இயக்குனர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அட்டகாசமான மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

. @csamudhan இயக்கத்தில்
நண்பர்கள் @VetriMaaran, @vp_offl & @beemji சிறப்பு தோற்றத்தில் #ரத்தம் #rathamteaser டிசம்பர் 5 மாலை 5 மணிக்கு release ஆகிறது☄️

பாசப்பறவைகள் கீழை📺⚒💣🔥⬇️ pic.twitter.com/byll8BdLEG

— vijayantony (@vijayantony) December 2, 2022