இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி தயாராகி இருக்கும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது.

இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா இணையும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற வடசென்னை திரைப்படத்தில் சந்திரா எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த ஆண்ட்ரியா ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பில் இயக்குனர் கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் உருவான அனல் மேலே பனித்துளி திரைப்படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்தார். சமீபத்தில் நேரடியாக சோனி லைவ் தளத்தில் வெளியான அனல் மேலே பனித்துளி திரைப்படம் மிகவும் அழுத்தமான திரைப்படமாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த வரிசையில் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் மனுசி திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அறம் திரைப்படத்தின் இயக்குனர் கோபி நயனார் இயக்கத்தில் அடுத்த படைப்பாக உருவாகும் மனுசி திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிக்க B4U & IVY என்டர்டைன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.

மனுசி திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மனுசி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள மனுசி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இதோ…
 

Happy to share the first look posters of #ManusiTheMovie all the best Team! pic.twitter.com/DNRsioQune

— Suriya Sivakumar (@Suriya_offl) December 21, 2022