தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ல் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்ததாக ஆடுகளம்,விசாரணை,வடசென்னை,அசுரன் என்று தொடர் வெற்றிப்படங்களால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளர்ந்து நிற்பவர் வெற்றிமாறன்.இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சூரி ஹீரோவாக விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.இதற்கு அடுத்து சூர்யா நடிப்பில் தயாராகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.விடுதலை படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் இந்த படத்தினை தயாரித்து வருகிறார்.இசைஞானி இளைஞராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.பவானி ஸ்ரீ,கெளதம் மேனன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயணட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்