பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கும் படம் ராஜபீமா. இப்படத்தை இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்குகிறார். ஆரவுடன் ஜோடி சேர்ந்து முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார் ஓவியா. 

பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடந்துவருவதாக கூறி வருகிறது சினிமா வட்டாரங்கள். சில நாட்கள் முன்பு இப்படத்தில் நடிகை யாஷிகாவும் இணைந்தார். கும்கி படம் போலவே இருக்கும் இப்படம் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

Veteran Director KS Ravikumar To Join The Rajabheema Crew Featuring Actor Arav In Lead

தற்போது தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என கருதப்படும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படக்குழுவில் இணைந்திருக்கிறார். சிறந்த இயக்குனர் அல்லாது சிறந்த நடிகராகவும் படத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.