சென்னை 600028 சரோஜா மங்காத்தா என வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரனின் தாயார் திருமதி மணிமேகலை நேற்று முன்தினம் காலமானார். இந்த நிலையில் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த அறிக்கையில், வெங்கட்பிரபுவின் தந்தை கங்கைஅமரன் அவர்களும் , தம்பி பிரேம்ஜியும், மற்றும் வெங்கட்பிரபுவின் குடும்பமும்,வெங்கட் பிரபுவும்   அவர்கள் குடும்பத்தின் குல தெய்வத்தை இழந்து நிற்பதாகவும் முன்னொருபோதும் பார்த்திராத இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் ஒரு பெயர் இறப்பில் திக்கித் திணறிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்து தேற்றி தோள் கொடுத்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் அவரது குடும்பத்தின் சார்பாக ஆத்மார்த்தமான நன்றிகளை  தெரிவித்த வெங்கட் பிரபு, நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும்  பொழிந்துவரும் பிரதிபலனில்லா அன்பில் நெகிழ்ந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 அடுத்ததாக காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் மருத்துவ குழுவினர் மற்றும் வெங்கட் பிரபுவின் குடும்ப நண்பர் டாக்டர் திரு.தீபக் சுப்ரமணியம் என அனைவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு வெங்கட் பிரபு  தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் வெங்கட்பிரபு உடன் பணிபுரியும் சக தோழர்கள், நண்பர்கள், சக திரைப்பட, ஊடக சகோதர-சகோதரிகள், ரசிகர்கள்  அனைவரது அஞ்சலிக்கும் பிரார்த்தனைகளுக்கும் கடமைப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து  

“தம் வாழ்வின் முக்கிய தருணத்தில் அலுவல்களுக்கு இடையிலும் என் அன்னையின் நிறைவு நாட்களிலும் ஆத்மா சாந்திகான வழிமுறைகளிலும் எங்களோடு இமயம் போல் நின்று வலுவூட்டி தேவைப்பட்ட அத்தனை உதவிகளையும் தக்க நேரத்தில் செய்து தந்த என் நண்பர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் . நன்றியுடன் 

வெங்கட்பிரபு க

 என அந்த அறிக்கையை நிறைவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.