பொதுவாக இயக்குனர்களின் பெயர் பலகை வரும்போது தான் ரசிகர்கள் கொண்டாடுவர். ஆனால் படம் முடிந்தவுடனும் ப்ளூப்பர் காட்சிகளால் ரசிகர்களை திரையரங்கில் கட்டி போடும் வித்தை தெரிந்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தற்போது STR வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

venkatprabhu

நம்ம வீட்டில் ஒருத்தருக்கு வந்தா தான் நாம ஒழுக்கம் கடைபிடிப்போம்னா அது ரொம்ப தப்பு. சென்னைல எல்லோரும் வெளிய தான் சுத்துறோம். நமக்கு வர சான்ஸே இல்லனு. வேண்டாம் ப்ளீஸ், தயவு செஞ்சு வீட்ல இருங்க. உங்களுக்காக இல்லனாலும் நம்ம நேசிக்கிறவங்களுக்காக வித் லவ் கொரோனா என்று பதிவு செய்திருந்தார். 

VenkatPrabhu

VenkatPrabhu

அதற்கு ரசிகர் ஒருவர், தலைவா உங்களுக்கு காசு கொட்டுது. நாங்க அப்படியா சொல்லுங்க. பெர்மனன்ட் ஜாப் இல்ல. வரலனா ஜாப் இல்லனு சொல்றாங்க. என்ன தலைவா பண்றது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, பெர்மனன்ட் ஜாபா ? எங்களுக்கா ? என் படம் ரிலீஸ் ஆகி 3.5 வருஷம் ஆகுது. எங்களுக்கு தான் அதிகம் கணிக்க முடியாத வாழ்க்கை. பாதுகாப்பாக இருங்கள் என்று அக்கறையாக பதில் ட்வீட் செய்துள்ளார்.