தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் ட்விஸ்ட் அமைத்து அசத்துவதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு.இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடகராகவும்,தயாரிப்பாளாராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் வெங்கட் பிரபு.

Venkat Prabhu Kajal Web Series Release on Feb 14

இவரது தயாரித்து இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து STR நடிக்கவிருக்கும் மாநாடு படத்தினை இயக்கவிருக்கிறார்.இதற்கிடையே ஹாட்ஸ்டார் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்.

Venkat Prabhu Kajal Web Series Release on Feb 14

காஜல் அகர்வால்,வைபவ்,கயல் அனந்தி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தற்போது இந்த வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வெப் சீரிஸின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Venkat Prabhu Kajal Web Series Release on Feb 14