தமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. கிரிக்கெட் பிரியர்களுக்கு சென்னை 28, காமெடி திரில்லர் விரும்பிகளுக்கு சரோஜா, பேச்சுளர்களின் கனவு லோகத்திற்கு கோவா, தல படமா மங்காத்தா, ருசி பார்க்க பிரியாணி, திகில் கலந்து மாஸ் காட்ட மாசு என்கிற மாசிலாமணி என பல ஜானரில் பட்டையை கிளப்பும் சினிமா சைன்டிஸ்ட். இன்னும் ரசிகர்களுக்கு பார்ட்டி மட்டும் தான் வைக்கவில்லை. அதற்கு பதிலாக மாநாடு நடத்தி வருகிறார். 

VenkatPrabhu PremG

இந்நிலையில் இசை சுனாமியான பிரேம்ஜி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல்வன் படத்தில் வரும் காட்சியை பகிர்ந்துள்ளார். அதில் சுஷ்மா சாமானிக்காளோ எனும் வசனத்தை சரோஜா சாமானிக்காளோ என நினைத்து கொண்டார் வெங்கட் பிரபு. தற்போது அந்த காட்சியை பகிர்ந்து தெளிவு படுத்தியுள்ளார் பிரேம்ஜி. இதற்கு விளக்கமளித்த வெங்கட் பிரபு, அப்போ சரோஜானு கேட்ருச்சு.. இப்போ என்ன பண்றது.. ஆனா விதை ஷங்கர் சார் போட்டது என குறிப்பிட்டுள்ளார். 

VenkatPrabhu

இதே வசனம் தான் பிற்காலத்தில் சென்னை 28 படத்தில் இடம்பெற்ற சரோஜா சாமானிக்காளோ பாடலுக்கு அச்சாரம். யுவன் இசையில் உருவான இந்த பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருப்பார்.