இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஓவியா மற்றும் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் களவாணி 2. சில வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம் இது. அதுமட்டுமல்லாமல் நடிகர் விமலின் 25-வது படம் இது. முதற் பாகம் போலவே இந்த படமும் கிராமத்து வாசனையுடனும், நகைச்சுவையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Vemals Kalavani 2 Gets A New Release Date Featuring Oviya Saranaya Vemal

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா தரமான படத்தில் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது களவாணி 2. படத்திலிருந்து ஆனந்த கூச்சல் பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது. மணி அமுதவானன் இந்த பாடலை எழுதியிருந்தார்.

Vemals Kalavani 2 Gets A New Release Date Featuring Oviya Saranaya Vemal

படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை Zee தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது எனும் விவரம் சமீபத்தில் தெரியவந்தது. ஜூன் 28-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் தற்போது ஜூலை 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.