தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விமல். கடைசியாக சற்குணம் இயக்கிய களவாணி 2 படத்தில் நடித்திருந்தார். புதிதாக ஒரு படத்திற்கு விமல் மற்றும் சற்குணம் இணைந்துள்ளனர். நகைச்சுவை படமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியதாக ஒரு தகவல் வெளியானது. 

sargunam

இந்த படத்தின் டைட்டில் பாட்டன் சொத்து என்பது நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது. அனிகா விக்ரமன் ஹீரோயினாக நடிக்கிறார். விமல் கைவசம் சண்டக்காரி திரைப்படமும் உள்ளது. இதில் ஸ்ரேயா நடிக்கிறார். 

vemal

விமல் மற்றும் சற்குணம் காம்போ நிச்சயம் ரசிகர்களை மகிழ்ச்சி மழையில் ஆழ்த்தும் என்று கூறலாம். இறுதியாக வெளிவந்த கன்னிராசி படம் விமலுக்கு சரியான வரவேற்பை தரவில்லை என்பது கூடுதல் தகவல்.