தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். சமீபத்தில் மக்கள் செல்வி என்ற பெயரை ரசிகர்களிடமிருந்து பெற்றார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வெல்வெட் நகரம். 

velvetnagaram velvetnagaram

சைக்கலாஜிகல் த்ரில்லர் கதையான இப்படத்தை மனோஜ்குமார் நடராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தை மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் பேனரில் அருண் கார்த்திக் தயாரித்துள்ளார். இப்படத்தில் ரமேஷ் திலக், ப்ரகாஷ் ராகவன், மாளவிகா சுந்தர், சந்தோஷ் கிரிஷ்ணா, கஸ்தூரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு பகத் குமார் ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிச் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இப்படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

velvetnagaram velvetnagaram

தற்போது படத்திலிருந்து இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி திரையிடப்பட்டது. மார்ச் 6-ம் தேதியான நாளை இந்த படம் திரைக்கு வருகிறது.