தமிழ் சினிமா பல்வேறு கலை திறமைகளை கண்டெடுத்த காவிய தாய். கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து இன்று சாதனையாளராக மாறியிருக்கும் இயக்குனர் குகன் சென்னியப்பனின் திரை பயணம் பற்றிய பதிவு தான் இது. 

vellaraja irelandfilmfestival

இன்றிருக்கும் காலவேகத்தின் நெட்டிசன்கள் மத்தியில் மூன்றாம் கண் போல் திகழ்வது வெப்சீரிஸ். படம் பார்க்காதவர்களை கூட சுண்டி ஈர்க்கிறது இந்த வெப்சீரிஸ். சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான "வெள்ள ராஜா" வெப்சீரிஸ் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பெரிதளவில் பேசப்பட்டது. அமேசானில் வெளியான முதல் தமிழ் வெப்சீரிஸ் என்ற பெருமையும் இதற்குள்ளது. 

parvathinair

அயர்லாந்தில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் "வெள்ள ராஜா" திரையிடப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரி தெரசா எனும் பாத்திரத்தில் நடித்த பார்வதி நாயர் பாத்திரத்திற்கு கைத்தட்டல் அரங்கை அதிர வைத்தது. 

2d

தற்போது கிடைத்த ருசிகர செய்தி என்னவென்றால், இயக்குனர் குகன் அடுத்ததாக 2டி நிறுவனத்துடன் இணைந்து பணிபுரியவுள்ளார். இதுவும் வெள்ள ராஜா மாதிரி ஆக்ஷன் நிறைந்த படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது திரைப்பயணம் மென்மேலும் வளர கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.