திருடா திருடி படத்தின் மூலம் இயக்குனராய் தமிழ் திரையில் கால் பதித்தவர் சுப்ரமணியம் சிவா. அதன் பிறகு பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கினார். வட சென்னை மற்றும் அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

தற்போது சமுத்திரக்கனி வைத்து சுப்ரமணியம் சிவா இயக்கியிருக்கும் திரைப்படம் வெள்ளை யானை. இப்படத்தில் சமுத்திரக்கனி ஒரு விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில் விவசாயம் எவ்வளவு அழிந்து வருகின்றது என்பதை உணர்ந்தும் கதை தான் இந்த வெள்ளை யானை. இதில் ஆத்மியா நாயகியாக நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எ.எல்.ரமேஷ் படத் தொகுப்பு செய்கிறார். 

யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்திலிருந்து வெண்ணிலா பாடல் வீடியோ கடந்த ஆண்டு வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விவசாயத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் ட்ரைலர் காட்சி இடம்பெற்றுள்ளது. 

கங்கனா ரணாவத் நடித்த தலைவி திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. விஜய் இயக்கிய இந்த படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

கடந்த வாரம் தனுஷ் நடிக்கும் D43 படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்திலும் தனுஷுடன் முக்கிய ரோலில் நடிக்கிறார் சமுத்திரக்கனி. வேலையில்லா பட்டதாரி, வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோஹனன் ஜோடியாக நடிக்கிறார்.