தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி.20 வருடங்களுக்கும் மேலாக தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும்,விறுவிறுப்பான தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இந்த தொடர்களில் நடித்து பலரும் தங்களுக்கென ரசிகர் பட்டாளங்கள் உருவாகும் அப்படி பலரும் நட்சத்திரங்களாக அவதரித்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் அடித்து வரும் தொடர் வேலைக்காரன்.சபரி இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.கோமதி ப்ரியா இந்த தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சத்யா,ராஷ்மிதா ரோஜா,சோனா நாயர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பான கதைகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் ஆதரவை பெற்று வெற்றிநடை போடுகிறது.தற்போது இந்த தொடர் 400 எபிசோடுகளை கடந்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.இந்த தொடரின் நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.