கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஓவியா தொடரில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் கோமதி ப்ரியா.இந்த தொடரில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.இந்த தொடரின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார் கோமதி ப்ரியா.

இதனை தொடர்ந்து தெலுங்கு சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்தார் கோமதி ப்ரியா.Hitler gari pellam என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து தெலுங்கில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் கோமதி ப்ரியா.இதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார் கோமதி ப்ரியா.

விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் வேலைக்காரன் தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.தற்போது பாடகியாக அவதாரம் எடுத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.புதிய அவதாரம் எடுக்கும் இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.