தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் வசந்தபாலன் வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் என தொடர்ந்து சிறந்த படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கி வருகிறார். முன்னதாக வசந்தபாலன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயில் திரைப்படம் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி வருகிறது அநீதி திரைப்படம். அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அர்ஜுன் சிதம்பரம், பரணி, அறந்தாங்கி நிஷா, வனிதா விஜயகுமார் ஆகியோர் அநீதி திரைப்படத்தில் நடித்துள்ளனர். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அநீதி திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் வெளியான அநீதி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து அநீதி படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் வசந்தபாலன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், அர்ஜுன் தாஸ், அறந்தாங்கி நிஷா, அர்ஜுன் சிதம்பரம் உட்பட படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்த நிகழ்வின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.