கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். மே 3-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.

Varsha Bollama

இந்நிலையில் நடிகை வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான பதிவை செய்துள்ளர். அதில் தான் 6-ம் வகுப்பு படிக்கும் போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது தனக்கு க்ரஷ் இருந்ததாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் பழைய பொருட்கள் கண்ணில் பட்டதாகவும், அதில் இவை கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Varsha Bollama VarshaBollama

அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்திற்கு பிறகு வர்ஷாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். தமிழ் மொழி படங்கள் அல்லாது தெலுங்கிலும் அசத்தி வருகிறார் வர்ஷா.