பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘வாரிசு’ ரசிகர்களின் பெரும் ஆதரவினை பெற்று கொண்டாட்டங்களுடன் திரையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலும் பொங்கலையொட்டி வெளியாவதால் முன்பதிவு மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. குடும்பங்களின் உணர்வை மையப்படுத்தி உருவாகி உள்ள வாரிசு படம் குறித்து வாரிசு பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி அவர்கள் நமது கலாட்டா பிளஸ் பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டார்.

ரசிகர்களுக்கிடையே பெரிய படங்களில் கலாச்சார பார்வையை எப்படி வேறுபடுத்தி கொடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,

அவர், “கலாச்சார அணுகு முறைக்கும், உணர்வுக்கும் வித்யாசம் உள்ளது. கலாச்சார அணுகுமுறை மொழிகளில் மாறுபடும் ஆனால் உணர்வுகள் மாறுபடாது. கலாச்சார அணுகுமுறை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் தனி தனி கலாச்சாரம் உள்ளது,ஆனால் உணர்வுகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது, ஒருவரை விரும்புவதும் வெறுப்பதும் உணர்வின் அடிப்படையில் சொல்லலாம். ஆனால் ஒருவரது தோற்றம் அவரது நடைமுறை, மொழிகளை அவரது கலாச்சாரத்தின் அடிப்படையில் சொல்ல முடியும். உணர்வுகள் எல்லா மொழி மக்களிடமும் புரிதலுக்கு இணங்கும். அதன்படிதான் மற்ற மொழி படங்கள் இங்கேயும் நம் மொழி படம் மற்ற மொழி மக்களிடமும் வரவேற்பு பெறுகிறது.” என்று குறிப்பிடுகிறார்.

மேலும் தமிழில் வாரிசு தெலுங்கு வாரிசுடு படத்தில் அம்மொழி மக்களுக்காக எந்தவொரு மாற்றமும் செய்யவில்லையா? என்ற கேள்விக்கு,”எந்தவொரு மாற்றமும் இல்லை, நாங்கள் முழுக்க முழுக்க ஒரு தமிழ் படத்தை தான் கொடுத்துள்ளோம். அதை தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிடுகிறோம்.இதில் எந்தவொரு காலச்சார அணுகுமுறையையும் நாங்கள் கையாளவில்லை. தோழா படத்திலும் நாங்கள் இதேதான் செய்தோம், தோழா படம் தான் என்னுடைய முதல் தமிழ் படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் இயக்குனர் வம்சி வாரிசு படம் குறித்தும் விஜய் உடன் பணியாற்றிய தருணம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த முழு வீடியோ இதோ..