பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படம் வெளியாகி தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழமெங்கும் ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில்  ஓடிக் கொண்டிருக்கின்றது. பெரும்பாலான பகுதிகளின் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் சீற்றம் இன்னும் குறையவில்லை. இதனையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் விஜயின் வாரிசு படத்தை பார்த்த மகிழ்ச்சியினை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்தில் விஜயுடன் நடித்த நடிகை சம்யுக்தா நமது கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டார் இதில் அவர் வாரிசு படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தளபதி விஜய் குறித்தும் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். 'துணிவு' படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு அவர் நழுவ விட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதில் அவர்

“எனக்கு இரண்டு முறை அவர்கள் நடித்த அழைத்தனர். எனக்கு அந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்க ரொம்பவும் ஆசையாக இருந்தது.இரண்டு முறையும் நான் வாரிசு படபிடிப்பு தளத்தில் இருந்தேன், கண்டிப்பா அடுத்த முறை இந்த வாய்ப்பு கிடைத்தால் நழுவ விட மாட்டேன்” என்று குறிப்பிட்டார்.

துணிவு படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் அதே நேரத்தில் வாரிசு படத்தில் நடிக்க முன்னதாக ஒப்பு கொண்டதாகவும் நடிகர் ஷ்யாம் முன்னதாக குறிப்பிட்டிருந்தார், இந்நிலையில் அவரை தொடர்ந்து நடிகை சம்யுக்தாவும் இணைந்துள்ளார்.  

நடிகை சம்யுக்தா பிக்பாஸ் தொலைகாட்சி மூலம் பிரபலமடைந்தவர். அதனை தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தனர். குறிப்பாக கடந்த ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ‘காபி வித் காதல்’ படத்தில் நடிகர் ஸ்ரீ காந்த் ஜோடியாக நடித்திருப்பார்அதனை தொடர்ந்து தளபதி விஜய் உடன் நடிக்க வாய்ப்பு அவருக்கு  கிடைத்தது. நடிகர் ஷ்யாம் அவர்களின் ஜோடியாக படத்தில் நடித்துள்ளார். விஜயுடன் பெரிதளவு காட்சிகள் இல்லையென்றாலும் கதைப்படி குடும்பத்தில் ஒரு ஆளாக நடித்துள்ளார். சிறிய பாத்திரம் என்றாலும் அதை சிறப்பாகவே கொடுத்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.  

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் உடன் சரத்குமார், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, சங்கீதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய வாரிசு படத்தை குறித்தும் விஜய் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த முழு வீடியோ இதோ