தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகைகளில் ஒருவரான நடிகை வரலக்ஷ்மி தனது சிறந்த நடிப்பால் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். படபடவென பேசும் வசன உச்சரிப்பும் யதார்த்தமான நடிப்பும் கொண்ட வரலக்ஷ்மி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் கன்னித்தீவு. இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் NBK107 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் வரலக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. தத்வம்சி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகியாக நடிக்க இஷான், பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குனர் ரமணா கோபிசெட்டி இயக்கித்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் இத்திரைப்படத்திற்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்  ஆக்ஷன் காட்சிகளையமைக்க , சாம்.C.S.  இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் தயாராகும் தத்வம்சி படத்தின் மோஷன் போஸ்டர் இதோ…