தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் வரலக்ஷ்மி சரத்குமார். தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். 

Varalakshmi

இந்நிலையில் வரலக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் நலனுக்காக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், உலகமே கோவிட் 19 பெருந்தொற்றால் வீடுகளில் முடங்கிக் கிடக்க, பெண்களுக்கு எதிரான அநீதிகள் அதிகரித்து வருவது தொடர்பான செய்திகள் மிகவும் வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார். மேலும் இதிலிருந்து விடுபட வீடியோ வாயிலாக வழி சொல்லியிருக்கிறார். 

VaraLakshmi

படத்தில் மட்டும் ஹீரோயினாக இல்லாமல், நிஜ வாழ்விலும் ஹீரோயினாக திகழும் வரலக்ஷ்மியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. கடைசியாக இவரது நடிப்பில் வெல்வெட் நகரம் திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து டேனி, சேஸிங், காட்டேரி போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.