இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஹீரோவாக மாறியுள்ளவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து வெளியான 100% காதல் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து 4g,ஜெயில்,காதலிக்க யாருமில்லை,காதலை தேடி நித்யானந்தா,பேச்சுலர்,

இவர் அடுத்ததாக நடித்து வரும் பேச்சுலர் படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது.பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக SMS,பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.

பிகில் படத்தின் மூலம் பிரபலமான அம்ரிதா ஐயர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தை சன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.வணக்கம் டா மாப்ள என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இத்தன நாளா யாரும் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்