தமிழில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் விஜய் தொலைக்காட்சி தமிழகத்தில் அதிக மக்களின் மனம் கவர்ந்த அபிமான தொலைக்காட்சி நிறுவனமாக விளங்குகிறது. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மேல் மக்களுக்கு தனி அபிப்பிராயம் தான்.

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் எனும் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு முன்னணி தென்னிந்திய நடிகையான ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் ஆகியோர்  நடுவர்களாக உள்ளனர்

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா விஜயகுமார் சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். வனிதா விஜயகுமார் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தற்போது அதற்கான காரணத்தை உணர்த்தும் வகையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியானது. நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா விஜயகுமார் இடையிலான காரசாரமான விவாதங்கள் நடைபெறும் பரபரப்பான இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கை காணலாம்.