சந்திரலேகா படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். நடிக்க வந்த வேகத்தில் சினிமாவில் இருந்து விலகி 19 வயதில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். 2000ம் ஆண்டு ஆகாஷை திருமணம் செய்த வனிதா கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றாரர். அதன் பிறகு ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

Vanitha Vijayakumar To Marry Filmmaker Peter Paul On June 27

ஸ்ரீஹரி தன் அப்பா ஆகாஷுடன் இருக்கிறார். மகள்கள் வனிதா விஜயகுமாருடன் இருக்கிறார்கள். படங்கள் கை கொடுக்காத நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நுழைந்து உலகளவில் பிரபலமானார். பிக் பாஸ் 3 வீடு பரபரப்பாக இருந்ததற்கு காரணமே வனிதா தான். அதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது சொந்தமாக யூடியூப் சேனலை துவங்கி நடத்தி வருகிறார்.

Vanitha Vijayakumar To Marry Filmmaker Peter Paul On June 27

இந்நிலையில் வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் திருமணம் என்று கூறி பத்திரிகை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து விசாரித்தபோது வனிதாவுக்கு திருமணம் நடப்பது உண்மை தான் என்பது தெரிய வந்தது. வரும் 27-ம் தேதி வீட்டில் வைத்தே அவர்களின் திருமணம் எளிமையாக நடக்கப் போகிறதாம். மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.