தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். இரண்டு நாட்கள் முன்பு விஜய்யின் பிறந்த நாள் அவரது ரசிகர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், வனிதா விஜயகுமார் வீட்டிற்கு சென்று விஜய் சர்ப்ரைஸ் செய்த பதிவு தற்போது இணையத்தை அசத்தி வருகிறது. 

தளபதி விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா. 1995-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இந்த நட்பு இன்று வரை இருப்பதாக கூறப்படுகிறது. யாராக இருந்தாலும் அவர்களுடன் நண்பர் போல் பழகுவது தளபதியின் இயல்பு என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் குறித்து திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் விஜய்யுடன் பழகிய நாட்களையும் கூறி வந்த நிலையில் தன்னுடைய பங்கிற்கு தான் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட ஒரு அரிய புகைப்படத்தை பதிவு செய்த வனிதா விஜயகுமார், தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

மகன் ஸ்ரீஹரி பிறந்த நாளை சரியாக ஞாபகம் வைத்து விஜய் தனது வீட்டிற்கு மனைவியுடன் வந்து அவனை வாழ்த்தியது குறித்து வனிதா குறிப்பிட்டுள்ளார். அந்த தருணத்தில் அவரது தாயார் மஞ்சுளா விஜயகுமாரும் உடன் இருந்ததையும் அவர் தெரிவித்துள்ளார். வனிதா விஜயகுமார் வெளீயிட்ட இந்த அரிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vijaysrihari first birthday with #thalapathy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on