கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

பலரும் இந்த வைரஸின் தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்,பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் என்று யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.பல பிரபலங்களும் இந்த வைரஸ் தாக்கி தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸால் பிரபல சீரியல் நடிகை பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.

கன்னடாவில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது சின்னத்திரை வாழக்கையை தொடங்கியவர் நவ்யா சுவாமி.தொடர்ந்து பல தெலுங்கு சீரியல்களில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ராதிகா நடித்த வாணி ராணி தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.இதனை அடுத்து சில சீரியல்களிலும் நடித்து வந்தார் நவ்யா.

கடந்த ஜூலை 2ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நவ்யா சுவாமி.அதில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மருத்துவருடன் கலந்துரையாடி  தன்னுடைய வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார்.தான் தகுந்த உடல்நலத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ள.

தற்போது தனக்கு முற்றிலும் குணமடைந்துள்ளது என்றும்,தான் குணமடைய தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்த அவர்,தான் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவர்க்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.மேலும் மக்கள் அனைவரும் கவனமாக இருங்கள் என்று தெரிவித்த அவர் கொரோனா குணப்படுத்தக்கூடிய நோய் தான் இருந்தாலும் அவ்வளவு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு,தனியாக ஒரு அறையில் இருப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#covid19 #coronawarrior #strongerthanever #feelingblessed #feelinggood #instagood #thankful #navyaswamy

A post shared by Navya Swamy (@navya_swamy) on