'இது ரொம்ப CHEAP!'- சக நடிகர்களோடு தொடர்புபடுத்தி பரவிய வதந்திகளுக்கு தரமான பதிலடி கொடுத்த வாணி போஜன்! ட்ரெண்டிங் வீடியோ

சக நடிகர்களோடு தொடர்புபடுத்திய வதந்திகளுக்கு வாணி போஜன் பதிலடி,vani bhojan reply to the rumours about her relationships | Galatta

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை வாணி போஜன் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த ஹாரர் திரில்லர் படமான மிரள் படங்கள் கதாநாயகியாக நடித்திருந்தார். இதனை அடுத்து இந்த 2023 ஆம் ஆண்டு அடுத்தடுத்து வரிசையாக வாணி போஜன் நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனரும் நடிகருமான M.சசிகுமார் அவர்களுடன் இணைந்து நடித்த பகைவனுக்கு அருள்வாய், பரத்துடன் இணைந்து நடித்த லவ், இயக்குனர் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்த பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் கேசினோ என வாணி போஜன் நடித்த திரைப்படங்கள்  நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இதனை அடுத்து பிரபுதேவாவுடன் இணைந்து ரேக்ளா, விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஆர்யன், மற்றும் தமிழ் & தெலுங்கில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக தற்போது வாணி போஜன் நடித்து வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் முழு கவனம் செலுத்தி வரும் வாணி போஜன் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்த ட்ரிபிள்ஸ் மற்றும் அருண் விஜய் உடன் இணைந்து நடித்த தமிழ் ராக்கர்ஸ் ஆகிய வெப் சீரிஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் வாணி போஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய வெப் சீரிஸான செங்களம் கடந்த மார்ச் 24ஆம் தேதி நேரடியாக ZEE5 தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பொலிட்டிக்கல் திரில்லர் வெப் சீரிஸாக தயாராகி இருக்கும் இந்த வெப் சீரிஸை சுந்தரபாண்டியன், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களின் இயக்குனர் SR.பிரபாகரன் எழுதி இயக்கியுள்ளார். அபி & அபி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த வெப் சீரிஸில் வாணி போஜன் உடன் இணைந்து கலையரசன், சரத் லோகித்தாஸ்வா, விஜய் சந்திரசேகர், மானசா ராதாகிருஷ்ணன், வேல ராமமூர்த்தி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனிடையே நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற நடிகை வாணி போஜன் FANS MEET விழாவில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் ரசிகர்களோடு கலந்துரையாடினார். அந்த வகையில் யூடியூபில் தனது பெயரில் தவறான செய்திகளோடு பரவி வரும் வீடியோக்கள் மற்றும் அதன் THUMBNAIL குறித்து தொடர்ச்சியாக பதில் அளித்து வந்த நடிகை வாணி போஜன் அவர்களிடம், “நீங்கள் மிகவும் எரிச்சல் அடைந்த ஏதாவது ஒரு THUMBNAIL இருக்கிறதா?” எனக் கேட்டபோது, "ஐயோ அப்பா நான் எந்த ஹீரோவோடு நடித்தாலும் உடனே ஒன்றை எழுதி விடுகிறார்கள்.. எழுதறது எழுதுகிறீர்கள் ஏதாவது ஒரு நல்ல ஹீரோவோடு போட்டால் நானும் கொஞ்சம் சந்தோஷப்படுவேன்” என நகைச்சுவையாக பேசிய நடிகை வாணி போஜனிடம், “எந்த ஹீரோவோடு?” என கேட்டபோது, “கொஞ்சம் பெரிய ஹீரோவோடு போட்டீர்கள் என்றால்…” என சிரித்தபடியே பேசிக்கொண்டு பின், “அவ்வளவு அல்பத்தனமாக நான் இல்லை. நான் பொதுவாக சொல்கிறேன், எல்லோருக்கும் குடும்பங்கள் இருக்கிறது.. எல்லோரும் பொறுப்புகள் இருக்கின்றன.. எல்லோரும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். சும்மா உட்கார்ந்து கொண்டு இவரோடு இவர் இருக்கிறார்… இவரோடு அவர் இருக்கிறார் என.. அவரவர் வேலைக்கு கொடுக்கும் கடின உழைப்பை தாண்டி... இப்போது நான் ஒரு ஹீரோவை நான் வெளியில் போய் நண்பர்களோடு, ஒரு கூட்டத்தோடு நான் போய் பார்க்க கூடாதா? எனக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. ஏனென்றால் பசங்களோடு சேர்ந்து சென்றாலே அதை ஒரு ரிலேஷன்ஷிப் என எழுதி விடுகிறார்கள். அது சரியல்ல…” என்றார்.

தொடர்ந்து “அசோக்செல்வன் அவர்களோடு ஒப்பிட்டு எழுதினார்களே” என கேட்டபோது, “அசோக் எனக்கு தம்பி மாதிரி... சரி அது எங்களுக்குள் சினிமாவில் நடிக்கிற போது எப்படி என்று தெரியவில்லை... அசோக்கோடு சேர்த்து எழுதியதெல்லாம் எனக்கு தெரியவில்லை.. ஏன் இப்படி தேவையில்லாமல் செய்கிறார்கள் என்று, ஆனால் நாங்கள் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... எங்களை விட படிப்பவர்கள் தான் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்.” என்றார்.

தொடர்ந்து ஜெய் அவர்களோடு ஒப்பிட்டு எழுதியது குறித்து கேட்டபோது, “ஜெய் உடன் எழுதிய போது, நான் ஜெயுடன் பேசினேன்... ஜெய் உடன் நீங்கள் இது மாதிரி ரிலேஷன்ஷிப் என எழுதி இருந்தால் கூட கவலைப்பட்டு இருக்க மாட்டேன். Live-in Relationship என்பது ரொம்ப CHEAP-ஆனது. எல்லோருக்கும் சொல்லி விட்டேன். பத்து தடவைக்கு மேல் சொல்லிவிட்டேன். சொந்த வீட்டில்.. கஷ்டப்பட்டு லோன் கட்டி, வீடு கட்டி அந்த வீட்டில் இருக்கிறேன். இதில் யாரோ ஒருவருடன் Live-in Relationshipல் அதுவும் அவரோடு அந்த வீட்டில் இருக்கிறேன் என்று பேசுவதெல்லாம் ரொம்ப CHEAP-ஆன விஷயம்” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான கேள்விகளுக்கு அதிரடிய பதிலளித்த, நடிகை வாணி போஜனின் அந்த முழு பேட்டி இதோ…
 

தமிழ் பேசாத போதும் பொன்னியின் செல்வனில் வானதியாக மணிரத்னம் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சோபிதா துலிபலாவின் விளக்கம் இதோ!
சினிமா

தமிழ் பேசாத போதும் பொன்னியின் செல்வனில் வானதியாக மணிரத்னம் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சோபிதா துலிபலாவின் விளக்கம் இதோ!

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரம் அதிகம் இடம்பெறாதது ஏன்? மனம் திறந்த சோபிதா துலிபலாவின் பதில் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரம் அதிகம் இடம்பெறாதது ஏன்? மனம் திறந்த சோபிதா துலிபலாவின் பதில் இதோ!

'த்ரிஷாவை இப்படி தான் கூப்பிடுவேன்!'- பொன்னியின் செல்வனில் பணியாற்றிய சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சோபிதா துலிபலா! வைரல் வீடியோ
சினிமா

'த்ரிஷாவை இப்படி தான் கூப்பிடுவேன்!'- பொன்னியின் செல்வனில் பணியாற்றிய சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சோபிதா துலிபலா! வைரல் வீடியோ