கடாரம் கொண்டான்  படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக கோப்ரா படத்தின் ரிலீஸ் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை அடுத்து சீயான் விக்ரம் அடுத்ததாக நடிக்கவுள்ள சீயான் 60 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.இந்த படம் பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் என்று கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்தார் ஆனால் சில காரணங்களால் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் கலாட்டாவுடனான சிறப்பு நேர்காணலில் இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டார் வாணி போஜன்.

இந்த படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என்றும் தனது ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்து விட்டது இன்னும் 3-4 நாட்கள் ஷூட்டிங் மீதமுள்ளது , இந்த கொரோனவால் மீத ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது இல்லையென்றால் முடிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.