சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்திருந்த தொடர் தெய்வமகள்.விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவான இந்த தொடர் 2013 மார்ச் முதல் 2018 பிப்ரவரி வரை கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒளிபரப்பானது.1400க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த தொடருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த தொடரில் கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார்.ரேகா கிருஷ்ணப்பா இந்த தொடரின் முக்கிய வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.அண்ணியார் என்று ரசிகர்களால் தனது கதாபாத்திரத்தின் பெயராலேயே பலராலும் அழைக்கப்பட்டார்.மேலும் பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த தொடரின் ஹீரோயினாக அறிமுகமானவர் வாணி போஜன்.இந்த தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.இந்த தொடரின் மூலம் கனவுக்கன்னியாக மாறினார் வணிபோஜன்.இதற்கு தொடர்ந்து சில முன்னணி தொடர்களில் நடித்து அசத்தியிருந்தார் வாணி போஜன்.

இதற்கு பிறகு சில படங்களில் நடித்து தனது சினிமா கனவை நனவாகினார் வாணி போஜன்.மேலும் சில முக்கிய படங்களில் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவரது ட்ரிப்பிள்ஸ் வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இவர் மீண்டும் சீரியல்களில் நடிக்கமாட்டாரா அல்லது இவரது சூப்பர்ஹிட் தொடர்கள் மீண்டும் ஒளிபரப்படாதா என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த தெய்வமகள் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.கலைஞர் டிவியில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் திங்கள் முதல் வியாழன் வரை 7 மணிக்கு ஒளிர்ப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

A post shared by TAMILTVEXPRESS (@tamiltvexpresss)