Vanguard படத்தின் அமர்க்களமான ஆக்ஷன் காட்சி !
By Aravind Selvam | Galatta | December 24, 2020 22:50 PM IST

ஆக்ஷன் படங்களுக்கு உலகளவில் பெயர்போன நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான்.தனது விடாமுயற்ச்சியால் மாபெரும் சூப்பர்ஸ்டாராக உருவெடுத்த இவருக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.எவ்வளவு ரிஸ்க் ஆன ஸ்டண்ட் ஆக இருந்தாலும் அசால்டாக செய்து அசத்துவார் ஜாக்கி சான்.
Vanguard என்று பெயரிடப்பட்டுள்ள இவரது படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியாகவிருந்தது.ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இந்த படம் ரிலீசானது.
ரிலீசானது முதல் வசூல் வேட்டை நடத்தி,விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த படம்.தொடர்ந்து உலகம் முழுவதும் திரையரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்தனர்.
இந்த படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது , இதனை முன்னிட்டு இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது.இந்த படத்தை trident ஆர்ட்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகின்றனர்.தற்போது இந்த படத்தின் புதிய ஆக்ஷன் காட்சி ஒன்றை படக்குழுவினர் தமிழில் வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்
VJ Chithra's death enquiry completed by RDO, report to be submitted in two days
24/12/2020 04:16 PM
Rio denies groupism, Aari's strong comeback with proof | New Bigg Boss 4 promo
24/12/2020 03:00 PM