தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம்பருத்தி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி,பூவே பூச்சூடவா என்று 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் கோகுலத்தில் சீதை,நீதானே எந்தன் பொன்வசந்தம்,புது புது அர்த்தங்கள் என்று புதிய சீரியல்கள் என சூப்பர்ஹிட் சீரியல்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

ஜீ தமிழில் புதிதாக தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள தொடர் நீதானே எந்தன் பொன்வசந்தம்.ஜெய் ஆகாஷ்,தர்ஷனா அசோகன் இந்த தொடரின் முன்னணி நட்சத்திரங்களாக நடித்து வருகின்றனர்.நிவாஷினி திவ்யா,சோனியா,சாய்ராம்,கார்த்திக் சசிதரன்,சுபிக்ஷா காயாரோஹணம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.

இந்த தொடர் 450 எபிசோடுகளை கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது பிரபல சீரியல் நடிகையான வந்தனா இந்த தொடரில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.