தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக 25 வருடங்களுக்கு மேலாக திகழ்ந்து வருவது சன் டிவி.இவர்களது சீரியல்களுகென்றும்,நிகழ்ச்சிகளுக்கு என்றும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.பல நூறு எபிசோடுகள் கடந்த சீரியல்களாக இருந்தாலும் புதிய சீரியல் ஆக இருந்தாலும் சரி ரசிகர்களின் ரசனை அறிந்து ஒளிபரப்பி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் சீரியல்களில் ஒன்று மகராசி.இந்த தொடரில் நடித்து வந்த சில முன்னணி நட்சத்திரங்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டு பின்னர் சில புது முன்னணி நடிகர்களுடன் இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் ஆர்யன் SSR,ஸ்ரித்திகா,மௌனிகா தேவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.700 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரின் விறுவிறுப்பை இன்னும் அதிகரிக்கும்படி இந்த தொடரில் ஒரு புது என்ட்ரி இணைந்துள்ளார்.பல சீரியல்களில் வில்லியாக மற்றும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்திய வந்தனா மைக்கேல் இந்த தொடரில் இணைந்துள்ளார்,இது குறித்த புகைபடம் ஒன்றையும் வந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.