மாடல் ஆக தனது மீடியா பயணத்தை தொடங்கி சின்னத்திரையில் சீரியல் நடிகையாக கலக்கி வருபவர் மான்யா ஆனந்த்.மாடல் ஆக தொடங்கி ராம்ப்வாக்கில் அசத்தி பின்னர் தெலுங்கில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

கன்னடத்தில் ஒரு காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தினார் மான்யா ஆனந்த்.இதனை அடுத்து சின்னத்திரையில் நடிகையாக ஒரு கன்னட சீரியல் மூலம் அறிமுகமானார்.அடுத்ததாக தெலுங்கில் ஒளிபரப்பான Bhagyarekha தொடரில் ஹீரோயினாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் மான்யா ஆனந்த்.

இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் அடித்து வரும் வானத்தைப்போல தொடரில் ஒரு ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் மான்யா ஆனந்த்.இவற்றை தவிர ஒரு கன்னட படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் மான்யா ஆனந்த்.

Raja Rani Roarer Rocket என்ற கன்னட படத்தில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சினிமாவில் ஹீரோயினாகும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.