சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் ப்ரீத்தி குமார்.முதலில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான ஆபீஸ் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.தனது நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் ப்ரீத்தி.

இதனை தொடர்ந்து லட்சுமி கல்யாணம்,வள்ளி,பிரியமானவள்,கேளடி கண்மணி,தெய்வம் தந்த வீடு,லட்சுமி வந்தாச்சு,கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்தார் ப்ரீத்தி.இவற்றை தவிர நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் தொடர்களிலும் நடித்து அசத்தி இருந்தார் ப்ரீத்தி குமார்.

பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் நெகட்டிவ் வேடங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் ப்ரீத்தி.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.சன் டிவியில் சக்கைபோடு போட்டு வரும் வானத்தைப்போல தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் ப்ரீத்தி.

தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஜீ தமிழில் ஆனந்த் செல்வன்,ஸ்வாதி சர்மா நடித்து வரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார் ப்ரீத்தி குமார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.இவரது வரவுக்கு பின் தொடரின் விறுவிறுப்பு கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

vanathai pola fame preethi kumar new entry in ninaithale inikkum zee tamil

vanathai pola fame preethi kumar new entry in ninaithale inikkum zee tamil