தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் இன்று ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. அதேப்போல் அஜித்தின் துணிவு திரைப்படமும் இன்று ரிலீஸானது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் திரைப்படங்கள் ஒரே இடத்தில் ரிலீசாகியிருக்கின்றன.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முதல் முறையாக இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ வெளியிட்டது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார்.பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக வாரிசு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக இன்று சென்னையில் உள்ள முன்னணி தனியார் திரையரங்கில் ரசிகர்களோடு படம் பார்த்த வாரிசு படக்குழுவினர் ரசிகர்களின் ஆரவாரத்தால் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதையடுத்து தளபதி விஜய் நேரில் சந்தித்துள்ள தில் ராஜு மற்றும் வம்சி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பரிமாறிக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் இதோ…
 

Thank You for all the overwhelming Love for #Varisu... Thank You Nanbas and Nanbis.. ❤️

Thank You Thalapathy @actorvijay Sir for all Your Trust.. 🤗@SVC_official @7screenstudio #Varisupongal #VarisuBlockbuster pic.twitter.com/KkoGj5IgVR

— Vamshi Paidipally (@directorvamshi) January 11, 2023

And the celebrations of #Varisu begin !!!#VarisuPongal #BlockbusterVarisu 🔥🔥🔥#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #VarisuPongal pic.twitter.com/Lci0piZYGF

— Sri Venkateswara Creations (@SVC_official) January 11, 2023