சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும்.அதில் நடிக்கும் புதுமுகங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக வெகு விரைவில் வளர்ந்து விடுவார்கள்.கொரோனா முதல் அலையை அடுத்து தொடங்கப்பட்ட புதிய தொடர் பூவே உனக்காக.தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது.

அருண்,ராதிகா ப்ரீத்தி,ஜோவிதா லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வந்தனர்.சில மாதங்களுக்கு முன் ஜோவிதா சில காரணங்கள் எதிர்பாராத விதமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இவர் விலகியபிறகும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழு பார்த்துக்கொண்டனர்.

ஜோவிதா விலகியதை அடுத்து அந்த கதாபாத்திரத்தை அப்படியே கதையில் இருந்து ஓரங்கட்டி விட்டு கதையை தொடர்ந்தனர்.இன்று காலை இந்த தொடரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் நாயகனாக நடித்து வரும் அருண்  சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இவரது இந்த திடீர் முடிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இவருக்கு பதிலாக வம்சம் தொடரில் நடித்த ஸ்ரீனிஷ் அரவிந்த் இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவர் அருண் கதாபாத்திரத்துக்கு மாற்றாக நடிக்கிறாரா அல்லது அருண் கதாபாத்திரத்தை அப்படியே முடித்து விட்டு புதிதாக ஒரு கதாபாத்திரத்தை கொண்டுவருகிறார்களா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.