விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் தல அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Valimai Producer Boney Kapoor Statement on Update

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

Valimai Producer Boney Kapoor Statement on Update

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.தற்போது இது குறித்து தயாரிப்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை தான் தயாரிக்கும் எந்த படம் குறித்த அப்டேட்டும் வராது என்று தெரிவித்துள்ளார்.எனவே வலிமை குறித்த அப்டேட்களும் இதன்பிறகு தான் வரும் என்று தெரிகிறது.