தமிழ் சின்னத்திரையில் கடந்த சில வருடங்களாக பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் வைஷ்ணவி அருள்மொழி.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் வைஷ்ணவி அருள்மொழி.

அடுத்தகாக சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான அழகு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் வைஷ்ணவி.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-வில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் வைஷ்ணவி.சீரியல்களில் அசத்தி வந்த வைஷ்ணவி சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள சபாபதி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து தனது வெள்ளித்திரை என்ட்ரியை சமீபத்தில் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பை தொடங்கிய பேரன்பு தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் வைஷ்ணவி.புதிய தொடரில் ஹீரோயினாக நடிப்பதால் நாம் இருவர் நமக்கு இருவரில் இருந்து இவர் விலகுகிறார் என்ற தகவல் பரவி வந்தது.இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அது வெறும் வதந்தி தான் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்,ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

vaishnavi arulmozhi denies rumours quitting naam iruvar namakku iruvar serial