சென்னையை சேர்ந்தவர் நக்ஷா சரண். பாடல்கள் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து தனது பாடும் திறமையை உலகிற்கு தெரியப்படுத்தி வந்தார்.இவரது பாடல் வீடியோக்களை ரசிகர்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில்,ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த முதல் திரைப்படமான ரோஜா.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று புது வெள்ளை மழை.பலரது மனம் கவர்ந்த இந்த பாடலை தனது குரலில் பாடி யூடியூப்பில் பதிவிட்டிருந்தார் நக்ஷா சரண்.

இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் நக்ஷா சரண்,இந்த பாடலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி  மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்து வந்தது.

இந்த கவர் சாங் இந்த பாடலை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து கண்களில் பட்டுள்ளது.ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுகொண்டிருக்கும் இந்த கவர் பாடலை யூடியூபில் பார்த்துவிட்டு, நக்ஷா சரணை வைரமுத்து பாராட்டியுள்ளார்.இது குறித்து நக்ஷா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

A post shared by NAKSHA SARAN✨ (@naksha_saran)