கடந்த 2017-ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மேயாத மான். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. வைபவ், ப்ரியா பவானிஷங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா ஆகியோரின் அசத்தலான நடிப்பில் வெற்றிப்படமாய் அமைந்தது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்திருந்தார். இதயம் முரளி என்ற பாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருப்பார் வைபவ். 

Meyaadha Maan

இந்நிலையில் நேற்று நடிகர் வைபவ்வின் பிறந்தநாளுக்கு ரத்னகுமார் வாழ்த்து தெரிவித்தார். ரத்னகுமாரின் பதிவில், சரியாக இதே நாளில் 2017-ஆம் ஆண்டு படப்பிடிப்பை துவங்கினோம். அப்போது எங்கள் குழுவில் இருந்து ஒரே சீனியர் நீங்கள் தான், எங்களை நம்பியதற்கு மிக்க நன்றி என வைபவை வாழ்த்தி கூறியிருந்தார். 

Rathnakumar

இதற்கு ரீட்வீட் செய்த வைபவ், லவ் யு ரத்னா... அடுத்த வருடம் இதே நாளில் நாம் இன்னொரு படத்தை துவங்குவோம் என பதிலளித்துள்ளார். இதனால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள். பலர் மேயாத மான் 2 என கமெண்ட் செய்து வருகின்றனர்.