தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு.சில காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர்.விஷாலின் கத்தி சண்டை,விஜயின் மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.ஆனால் இவர் மீண்டும் நிறைய படங்களில் நடிக்கவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Vadivelu Reaction To Rajinikanth Political Speech

சில மாதங்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியிட்ட வடிவேலு நான் எப்போதும் தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன்.ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க விரைவில் ஒரு நல்ல படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Vadivelu Reaction To Rajinikanth Political Speech

திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக வந்திருந்த வடிவேலு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.எல்லோரும் நலமாக இருக்கவேண்டும் என்பதற்காக சாமி தரிசனத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.சினிமாவில் மக்களின் ஆதரவோடும் ஆண்டவனின் துணையோடும் விரைவில் நடிப்பேன் என்று தெரிவித்தார்.

Vadivelu Reaction To Rajinikanth Political Speech

ரஜினியின் அரசியல் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியபோது.அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது அவருக்கே தெரியாது அதனை அவர் வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்த அவர் ரஜினியின் கட்சிக்கு ஒரு தலைமை,ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற கொள்கையை நல்ல விஷயம் என்று ஆதரித்தார்.வரும் 2021-ல் தான் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாகவும் எங்க நின்னாலும் நீங்களும் ஒட்டு போடுவீங்களா என்று தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பதிலளித்து சென்றார் வைகைப்புயல்.