மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை மன்னனாக திகழும் வைகை புயல் வடிவேலு அவர்கள் தனது இரண்டாவது வின்னிங்சில் அடுத்த ரசிகர்களை மகிழ்விக்க ரெடியாகிவிட்டார். முன்னதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தயாரித்தல் அடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் வைகை வடிவேலு நடித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கும் மாவட்ட திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க இறுதிக்கட்ட படிகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகின்றன. இதனிடையே வைகைப்புயல் வடிவேலுவின் அடுத்த நகைச்சுவை விருந்தாக தயாராகி இருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.

வைகைப்புயல் வடிவேலுவின் ஃபேவரட் கதாபாத்திரங்களில் ஒன்றான நாய் சேகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பக்கா காமெடி என்டர்டெய்னராக உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன், யூட்யூபர் பிரசாந்த் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலிருந்து அடுத்த பாடலாக டீசண்டான ஆளு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த பாடல் இதோ…