வதந்தி இயக்குனருடன் கைகோர்க்கும் சர்தார் தயாரிப்பாளர்... புதிய படத்தின் அட்டகாசமான அறிவிப்பு இதோ!
By Anand S | Galatta | January 05, 2023 19:44 PM IST

தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் இயக்குனராகவும் சிறந்த நடிகராகவும் ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி இடம் பிடித்த SJ.சூர்யா, விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து தயாரிக்கும் வதந்தி - The Fable of velonie எனும் வெப் சீரிஸில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் SJ.சூர்யாவுடன் இணைந்து லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வதந்தி வெப் சீரிஸ் டிசம்பர் 2-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது வதந்தி வெப் சீரிஸ் மற்றும் கொலைகாரன் திரைப்படத்தின் இயக்குனரான ஆண்ட்ரு லூயிஸ் இயக்கும் அடுத்த திரைப்படத்தை நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் கடந்த ஆண்டு (2022) தீபாவளி வெளியீடாக வந்து சூப்பர் ஹிட்டான சர்தார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக க்ரைம் த்ரில்லர் படமாக கவனத்தை ஈர்த்த கொலைகாரன் திரைப்படத்தை, தொடர்ந்து க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக வதந்தி வெப்சீரிசிலும் கவனிக்க வைத்த இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கும் நிலையில், இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We are elated to announce that we have signed #Kolaigaran and #Vadhandhi fame director @andrewxvasanth for his next film in Tamil. @lakku76 @venkatavmedia
— Prince Pictures (@Prince_Pictures) January 5, 2023
More details soon... pic.twitter.com/l2MsbiHlKL