நடிகை அதிதி பாலனின் அசத்தலான நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அருவி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் அருண் பிரபு புருஷோத்தமன். அருவி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனின் இரண்டாவது படைப்பாக தயாரானது வாழ்.

நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட வாழ் திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க நடிகைகள் T.J. பானு மற்றும் டிவா தவான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில் முன்னணி பாடகர் பிரதீப் குமார் வாழ் திரைப்படத்தில் இசையமைத்திருந்தார்.

வாழ் என்ற தலைப்பிற்கு தகுந்தாற்போல் படம் பார்ப்பவர்களின் ஆழ் மனதிற்குள் சென்று வாழ் என்று உரக்கச் சொல்லும் திரைப்படமாக வெளிவந்த வாழ் திரைப்படம் இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத, உலகை சுற்றி பல அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது. நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் கடந்த ஜூலை 16ஆம் தேதி இப்படம் வெளியானது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான டிவா தவானின் புதிய புகைப்படம் இன்ஸ்டாகிராமில் தீயாக பரவி வருகிறது. நீச்சல் உடையில் கடற்கரையில் இருக்கும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Diva Dhawan (@diva.dhawan)