நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார். அவரது நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்குனராக அறிமுகம் ஆன கனா படத்தினை சிவகார்த்திகேயன் தான் அவருக்காக தயாரித்து இருந்தார். அது மட்டுமின்றி அவர் அந்த படத்தின் ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்து இருப்பார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலமாக வாழ் என்ற படத்தினை தயாரித்துள்ளார். அருவி பட புகழ் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கி வரும் இந்த படத்தின் போஸ்டர் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடல் ஆஹா வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. பிரதீப் விஜய் இசையமைப்பில் இந்த பாடலுக்கு காட்சிகளை ஷெல்லி எடுத்திருந்தார். 

முன்பு அருண் பிரபு புருசோத்தமன் இயக்கிய அருவி படம் நல்ல விமர்சனம் பெற்ற நிலையில், வாழ் படத்திற்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அது மட்டுமின்றி இதனை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருகிறது.

இந்நிலையில் வாழ் படத்தின் இரண்டாம் சிங்கிள் ஃபீல் சாங் வெளியானது. அதில் இருக்கும் காட்சிகள் மிகவும் அழகான வகையில் எடுக்கப்பட்டு இருக்கிறது என அவரது ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தேனிசைத் தென்றல் தேவா இந்த பாடலை பாடியுள்ளார். இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இதற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். 

கொரோனா வைரஸ் குறைந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டதால், வாழ் படமும் திரையரங்கில் வெளியாகக்கூடும் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.