சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று வானதைப்போல.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் ஹீரோவாக தமன் குமார் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக ஸ்வேதா கெல்ஜே நடித்து வந்தார்.

சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக ஸ்வேதா கெல்ஜே சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.துளசியாக அசத்தி வந்த இவர் திடீரென விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று வந்த இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஸ்வேதா கெல்ஜே விலகியதை அடுத்து யார் இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

வனத்தைப்போல தொடரில் புதிய துளசியாக நாயகி தொடரின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து பிரபலமான சீரியல் நடிகை மான்யா நடிக்கிறார்.இவர் இந்த தொடரின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளதற்கான சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.