தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராய் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் வாயிலாக வானம் கொட்டட்டும் என்ற படத்தை தற்போது தயாரித்துள்ளார். 

vaanamkottatum vikramprabhu

இந்த படத்தை தனா இயக்கிவருகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர். சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்திலிருந்து ஈஸி கம் ஈஸி கோ மற்றும் கண்ணு தங்கம் பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. 

madrastalkies

ynotx vaanamkottatum

தற்போது இந்த படத்தின் விநியோக பங்குதாரராக Yநாட்X நிறுவனம் இணைந்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மெட்ராஸ் டாக்கீஸ் வாயிலாக வெளியானது. படத்தின் டீஸர் ஜனவரி 8-ம் தேதி வெளியாகும் என்ற தகவல் தெரியவந்தது.