இயக்குனர் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இன்று வெளியான திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

sarathkumar

சித் ஸ்ரீராம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படம் மிகுந்த ப்ரீதா ஜெயராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதமாக அமைந்துள்ளது. மணிரத்னம் இயக்கியது போலவே உள்ளது என படம் பார்த்த திரை விரும்பிகள் புகழாரம் சூட்டி வருகின்றனர். 

Vikramprabhu

தற்போது படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த படக்குழுவினர், படத்தில் அனைவரது நடிப்பும் மிக அருமையாக இருந்தது. பழிவாங்குதல் மட்டுமே தீர்வாக முடியாது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இதை இயக்கியுள்ளார் தனா. அவரை பாராட்ட தனியாக பத்திரிக்கையாளர் சந்திப்பே வைக்கலாம் என்று சரத்குமார் கூறியுள்ளார்.